தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 26 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

DIN


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 26 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கடந்த 16 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழுக் கொள்ளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 26 ஆவது நாள்களாக அணை நிரம்பிய நிலையில் உள்ளது.

காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

அணைக்கு வியாழக்கிழமை காலை 8 நிலவரப்படி, வினாடிக்கு 1,40,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,40,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,17,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT