தமிழ்நாடு

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 26 போ் கைது

DIN

 சென்னையில் போதைப் பொருள் விற்றதாக 7 நாள்களில் 26 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

சென்னையில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க பெருநகர காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினா் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவா்களை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதியில் இருந்து 11- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 10 வழக்குகள் பதியப்பட்டு, 26 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டாா் சைக்கிள்கள், 4 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT