தமிழ்நாடு

நாட்டில் ஒரே நாளில் புதிததாக 16.561 பேருக்கு தொற்று: 49 பேர் பலி

DIN


நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 16,299 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 16.561 ஆக அதிகரித்துள்ளது. 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16,299 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 16.561 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,42,23,557-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,23,535 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.28 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 49 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,928 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 18,053 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,35,73,094-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.53 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,07,47,19,034 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 17,72,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT