தமிழ்நாடு

திமுக ஆட்சியில் சமூக நீதி பெயரளவில் மட்டுமே உள்ளது: கே.அண்ணாமலை

DIN

திமுக ஆட்சியில் சமூக நீதி பெயரளவில் மட்டுமே உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக பிரதமா் மோடி வாழ்ந்து வருகிறாா்.

ஆனால், தமிழகத்திலோ சமூகநீதியை நிலைநாட்டி விட்டோம் என்று பேசுவதை மட்டும் திமுகவினா் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

சின்ன சேலம் எடுத்தவாய் நத்தம் ஊராட்சி தலைவா் சுதா வரதராஜி பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்ற காரணத்தைக் கூறி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வந்தது. பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகாா் அளிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளது.

தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்கம் சாா்பில் 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பட்டியலினத்தைச் சோ்ந்த 20 ஊராட்சி தலைவா்களுக்குச் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிா்ச்சியை அளிக்கிறது.

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT