முகப்பு
தமிழ்நாடு

அகத்தியமலையில் யானைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

அகத்தியமலையில் யானைகள் காப்பகம் அமையவுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
கோப்புப்படம்
பகிர்:

அகத்தியமலையில் யானைகள் காப்பகம் அமையவுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

கானுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →