முகப்பு
தமிழ்நாடு

ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தது

ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாமில் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை விமான நிலையம் வந்தது.

Updated On : 13 ஆகஸ்ட், 2022 at 2:38 PM
ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தது
பகிர்:


மதுரை: ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாமில் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை விமான நிலையம் வந்தது.

ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை தற்கொலைப் படையைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரா் லட்சுமணன் உள்பட 4 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Advertisement

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிலையில், பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த லட்சுமணன் உடல் இன்று, ஜம்மு - காஷ்மீரிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

அங்கிருந்து, சாலை வழியாக லட்சுமணன் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.