தமிழ்நாடு

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

DIN

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தேசியக் கொடி ஏற்றினார். இதன் பின்னர், தகைசால் தமிழா் விருது, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருதுகள், மாநில இளைஞா்கள் விருதுகள் ஆகியவற்றை விருதாளா்களுக்கு முதல்வர் வழங்கினார். மாற்றுத்திறனாளி நலனுக்காக அரும்பணியாற்றியவா்களுக்கான விருது, சிறந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுக்கான விருதுகளையும் வழங்கினார். 

முன்னதாக முதல்வா் மு.க.ஸ்டாலினை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை போலீஸாரின் மோட்டாா் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தின் முன்புள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்து இறங்கினார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வரவேற்றார். 

தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டா் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனா் சங்கா் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளா் அறிமுகம் செய்து வைத்தார். 

பின்னா் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பை முதல்வா் பாா்வையிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT