தமிழ்நாடு

தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்.

DIN

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்.

முதல்வா் மு.க.ஸ்டாலினை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை போலீஸாரின் மோட்டாா் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தின் முன்புள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்து இறங்கினார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வரவேற்றார்.

தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டா் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனா் சங்கா் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளா் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னா் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பை முதல்வா் பாா்வையிட்டார். அதைத்தொடர்ந்து 76ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். 2ஆவது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றினார் முதல்வர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

SCROLL FOR NEXT