தமிழ்நாடு

தமிழக மதுக்கடைகளில் ஆக.14-ல் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சுதந்திர நாளையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். இதையொட்டி, முந்தைய நாளே இரண்டு நாள்களுக்கு தேவையான மதுபானங்களை வாடிக்கையாளர் வாங்குவதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதில், மதுரை மண்டலத்தில் ரூ. 58.26 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ. 55.77 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ. 54.12 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 53.48 கோடி, கோவை மண்டலத்தில் ரூ. 52.29 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

SCROLL FOR NEXT