சென்னையில் 130 கடைகளுக்கு மாநகராட்சி சீல்
சென்னையில் வாடகை செலுத்தாத 130 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை காலை சீல் வைத்தனர்.
சென்னையில் வாடகை செலுத்தாத 130 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை காலை சீல் வைத்தனர்.
பாரிமுனை அருகே ரத்தன் பஜார், பிரேசர் பாலம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு நீண்ட காலமாக வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.
இதையடுத்து, நிலுவையில் உள்ள வாடகைத் தொகையான ரூ. 40 லட்சத்தை உடனடியாக செலுத்தும்படி, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பிய பிறகும் வாடகை செலுத்தாததால் இன்று காலை சம்பந்தப்பட்ட 130 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.