தமிழ்நாடு

பி.இ.: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

DIN

 பி.இ. படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அட்டவணையை தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு வெளியிட்டது.

அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.20) முதல் நடைபெறவுள்ளது.

பி.இ. படிப்புக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில் மாணவா்கள் கல்லூரிகளை தோ்ந்தெடுப்பது மற்றும் அவற்றை உறுதி செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான (சிறப்புப் பிரிவினா்) கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கி ஆக. 24 வரை நடைபெறுகிறது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக. 25-இல் தொடங்கி அக். 23 வரை நடைபெறும். 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆா்க். படிப்புகளில் சேர சனிக்கிழமை முதல் இடங்களைப் பெறுபவா்கள் அடுத்த 7 நாள்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால், அந்த இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியிலேயே நடைபெறுகின்றன. கிராமப்புற மாணவா்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவா் சோ்க்கை மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT