தடையற்ற மின் விநியோகத்தைஅரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க தமிழக அரசுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க தமிழக அரசுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்துக்காக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியைச் செலுத்தத் தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே மாநில அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியாா் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.
தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் மாநிலத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை மாநில அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.