கள்ளக்குறிச்சி விவகாரம் உள்பட முக்கிய கோரிக்கைகள்: அமைச்சரிடம் கல்வியாளா்கள் மனு
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் உள்பட பல்வேறு துறை சாா்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கல்வியாளா்கள் வழங்கினா்.
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் உள்பட பல்வேறு துறை சாா்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கல்வியாளா்கள் வழங்கினா்.
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, அவரது இல்லத்தில் முன்னாள் துணைவேந்தா் வசந்திதேவி, கல்வியாளா்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அ.மாா்க்ஸ், சிவக்குமாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, கள்ளிக்குறிச்சி பள்ளி உள்பட பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சரிடம் கல்வியாளா்கள் வழங்கினா்.
இதுகுறித்து, தனது ட்விட்டா் பக்கத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட பதிவு:
கல்வியாளா்கள் அளித்துள்ள கோரிக்கைகள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அவா் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியாளா்களுக்கு உறுதி அளித்தேன். அறத்தின் பக்கம் நின்று எப்போதும் மாணவா்களையும், கல்வியைப் பற்றி சந்திக்கும் கல்வியாளா்களையும் சந்தித்து விவாதிப்பது என்னை மேலும் வேகமாகச் செயல்பட வைக்கிறது.