அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் கல்வியாளர்கள் சந்திப்பு 
தமிழ்நாடு

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் கல்வியாளர்கள் சந்திப்பு

கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வசந்திதேவி, அ.மார்க்ஸ், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

DIN

கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வசந்திதேவி, அ.மார்க்ஸ், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சுட்டுரைப் பதிவில், “சென்னை முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்த கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வசந்தி தேவி, அ.மார்க்ஸ், சிவக்குமார் ஆகியோருடன் கல்வித்துறை மேம்பாடு குறித்து விவாதித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பான கோரிக்கை மனுவினையும் அளித்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தேன். அறத்தின் பக்கம் நின்று எப்போதும் மாணவ செல்வங்களையும், கல்வியைப் பற்றியும் சிந்திக்கும் கல்வியாளர்களைச் சந்தித்து விவாதிப்பது மேலும் வேகமாகச் செயல்பட வைக்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT