முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 627 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 627 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 627 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 627 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 627 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 627 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,62,719-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 94 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 81, செங்கல்பட்டு 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,033 ஆக உள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 769 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,18,599-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,087 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →