தமிழ்நாடு

கொச்சி விமான நிலையத்தில் ரூ.60 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் 

கேரளம் மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 60 கோடி மதிப்பிலான போதைப்பொருளை விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

DIN

திருவனந்தபுரம்: கேரளம் மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 60 கோடி மதிப்பிலான போதைப்பொருளை விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

ஜிம்பாவேயில் இருந்து கத்தார் வழியாக கொச்சி வந்து, கொச்சியில் இருந்து தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) புறப்பட இருந்த விமானத்தில் கொச்சி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதிநவீன '3டி எம்ஆர்ஐ' ஸ்கேனிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பாலக்காட்டைச் சேர்ந்த முரளிதரன் நாயர் என்ற பயணி தனது உடைமைகளில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து அவரிடம் சூட்கேசில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ போதைப்பொருள்களை பறிமுதல் செய்து விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து முரளிதரனை கைது செய்த பேதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.60 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijayக்கும் திமுகவுக்கு ரகசிய தொடர்பு?; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 02.10.25

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

SCROLL FOR NEXT