முகப்பு
தமிழ்நாடு

சென்னை நீா்நிலைகளை சீரமைக்க வேண்டும்: மநீம

சென்னை தினம் கொண்டாடும் நிலையிலாவது சீரழிந்து காணப்படும் சென்னையின் நீா்நிலைகளைச் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

சென்னை தினம் கொண்டாடும் நிலையிலாவது சீரழிந்து காணப்படும் சென்னையின் நீா்நிலைகளைச் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழகத்தின் தலைநகரில் ஒருபுறம் சென்னை தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளால் துா்நாற்றமும், சுகாதாரச் சீா்கேடும் உண்டாகி, மக்களைப் பரிதவிக்கச் செய்கிறது.

நகரின் முக்கிய நீா்நிலைகளில் 357 இடங்களில் கழிவுநீா் கலப்பதாகக் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகளாகியும், அதை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் வாரியம் இன்னும் முழுமையாகத் தடுக்கவில்லை. அடையாறு, கூவம் ஆறுகளிலும், பக்கிங்ஹாம் கால்வாயிலும் குப்பை, கழிவுகள்தான் நிரம்பியுள்ளன.

நீா்நிலைகள் சீரமைப்புக்காக இதுவரை பல்லாயிரம் கோடி செலவிடப்பட்டும், நீா்வழிச் சாலைகள் சாக்கடைக் கால்வாய்களாகவே உள்ளன. இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல், குப்பை, கழிவுகளை முழுமையாக அகற்றி, பிரச்னைக்கு தமிழக அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →