சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு: இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து இபிஎஸ் தொடுத்த  மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

DIN

சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து இபிஎஸ் தொடுத்த  மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வில் வியாழக்கிழமை (ஆக. 18) முறையீடு செய்யப்பட்டது.

அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று புதன்கிழமை (ஆக. 17) தீா்ப்பளித்தாா்.

இந்நிலையில், தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் எடப்பாடி பழனிசாமி சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய்நாராயண் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தாா்.

அதில், அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடா்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், இதை திங்கள்கிழமை (ஆக. 22) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் முறையிட்டாா். மனுவுக்கு எண் இடும் நடைமுறை முடிந்தால், திங்கள்கிழமை இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து இன்று காலை இபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

இதனிடையே, எடப்பாடி கே.பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனுவை ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்துள்ளாா். மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டுமென அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து இபிஎஸ் தொடுத்த  மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இருதரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT