தமிழ்நாடு

மாநில கல்விக் கொள்கை: மக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

மாநில கல்விக் கொள்கை குறித்து உயர்நிலைக் குழுவிடம் கருத்து தெரிவிக்க காலஅவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகளை பெறுவதற்கு முன்னாள் தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

பொதுமக்கள், கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சாா்ந்தவா்கள் ஆகியோரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் குழுவிற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலும் ஒரு மாதம் காலஅவகாசம் நீட்டித்து அக்டோபர் 15 வரை கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT