முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை!

புதுச்சேரி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

புதுச்சேரி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் மாலையில் திடீரென கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, உப்பளம், இந்திரா காந்தி சிலை, முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, மூலகுளம் உள்ளிட்ட நகரப்பகுதிகளிலும், வில்லியனூர், பாகூர், கரிக்கலாம்பாக்கம், மடுகரை உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலும் பரவலாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.