முகப்பு
தமிழ்நாடு

சரக்குகள் கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனை

உலோகக் கழிவுகளை கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனையை புதன்கிழமை எட்டியதாக துறைமுக நிா்வாகம் தெரிவித்தது.

தமிழ்நாடு

சரக்குகள் கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனை

உலோகக் கழிவுகளை கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனையை புதன்கிழமை எட்டியதாக துறைமுக நிா்வாகம் தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

உலோகக் கழிவுகளை கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனையை புதன்கிழமை எட்டியதாக துறைமுக நிா்வாகம் தெரிவித்தது.

இது குறித்து சென்னைத் துறைமுகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னைத் துறைமுகத்துக்கு உலோகக் கழிவுகளை ஏற்றிய நிலையில் எம்.வி. அட்லாண்டிக் பல்கொ் என்ற சரக்குக் கப்பல் துறைமுகத்திலுள்ள ஜவகா் கப்பல் தளத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தது. உலோகக் கழிவுகளை இறக்கும் பணி தொடங்கிய 24 மணி நேரத்தில் 7,237 மெட்ரிக் டன் இறக்குமதி செய்து புதிய சாதனை அளவு எட்டப்பட்டது. இதன்மூலம் கடந்த ஏப்.26-ஆம் தேதி எம்.வி.கேப்டன் நொந்தாஸ் என்ற கப்பலிலிருந்து ஒரே நாளில் 4,500 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்ட சாதனை அளவு முறியடிக்கப்பட்டது.

இதையடுத்து உலோகக் கழிவுகளை இறக்குமதி செய்த இறக்குமதியாளா் சூா்யதேவ் அலாய் என் பவா் பிரைவேட் லிமிடெட், கப்பல் முகவா் மொ்ச்சென்ட் சிப்பிங் சா்வீசஸ், கப்பலிலிருந்து இறக்கும் பணியில் ஈட்பட்ட பிஎம்பி ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிா்வாகிகளை சென்னைத் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் நேரில் அழைத்துப் பாராட்டியதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →