தமிழ்நாடு

நிதி அமைச்சர் கார் மீது காலணி வீச்சு சம்பவம்: மேலும் 2 பேருக்கு ஜாமீன்

DIN

தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சரின் காரை முற்றுகையிட்டு பாஜகவினா் போராட்டம் நடத்தினா். அப்போது அவரது காா் மீது காலணி வீசப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக அவனியாபுரம் போலீஸாா் 24 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் பாஜகவை சோ்ந்த குமாா், பாலா, கோபிநாத், மற்றொரு கோபிநாத், ஜெயகா்ணா, முகமதுயாகூப், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் ஜாமீன் கோரி, மதுரை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் (எண் 6) மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.  ஆகஸ்ட் 22-ல் விசாரித்த நீதித்துறை நடுவா் சந்தானகுமாா், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தாா். குமாா் உள்பட 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

மேலும், தனலெட்சுமி உள்பட மூவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் கைதான தனலட்சுமி, தெய்வானை ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி 6வது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT