தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது 

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே விசாரணைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதன் தொடா்ச்சியாக 2022 மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினா்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்றது.  இதுவரை 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கை, முதல்வரிடம் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாளை காலை 10.30 மணிக்கு ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்கிறது. 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நாளை தாக்கல் செய்ய உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

SCROLL FOR NEXT