தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு 
தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி: தலைமைச் செயலாளர் ஆலோசனை

ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

DIN

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனையில் முதல்வரின் தனி செயலர் உதயச்சந்திரன், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனயில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைன் விளையாட்டுகள் தொடா்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயா் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது.

குறிப்பாக, பொதுமக்கள், பெற்றோா், ஆசிரியா்கள், மாணவா்கள், இளைய தலைமுறையினா், உளவியலாளா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கடந்த 7-ஆம் தேதி முதல் கருத்துகள் பெறப்பட்டன. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அலுவலகத்திலோ அல்லது மின் அஞ்சல் முகவரியிலோ ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்குள்ளாக கருத்துகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு கூறியிருந்தது.

கருத்துகளைத் தெரிவிக்க கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடா்பாக, அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஆலோசனை நடத்தினார்.


இந்நிலையில்,  ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT