தமிழ்நாடு

கனமழை: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

DIN

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர். 

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 9 மணியளவில் திடீரென கன மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதியற்றனர். மேலும், பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். 

வீடுகளில் புகுந்த மழை நீர்

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பல்வேறு வார்டுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் படுக்கைகளை எடுத்துக் கொண்டு வேறு இடம் நோக்கி ஓடினர். குறிப்பாக பெண்கள் வார்டில் மழை நீர் புகுந்ததால்  அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த உள் நோயாளிகள் அனைவரும் ஆண்கள் பிரிவில் தங்க வைக்கப்பட்டனர்.  

தெருக்களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். 

அதேபோல் ராசிபுரம் அருகே உள்ள தட்டான் குட்டை ஏரியில் நீர் நிரம்பி வழிந்து ஓடியது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராசிபுரம் ஏரியில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT