இலங்கை கடற்படையால் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவா்கள் மற்றும் விசைப்படகு. 
தமிழ்நாடு

மீனவர்கள் கைதுக்கு எதிர்ப்பு: ராமேசுவர மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

DIN


கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே இலங்கை கடல்பகுதியில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை இலங்கை கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்து சென்றதை கண்டித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 465 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன்பிடிக்கச் சென்றனா். ஞாயிற்றுகிழமை அதிகாலையில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது 5 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினா் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த நிஷாந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் நிஷாந்த், ஆண்டி, கருணாநிதி, உலகநாதன், சூசைவியாகுலம், ஜேசு ஆகிய 6 மீனவா்களையும் சிறைபிடித்து தலைமன்னாா் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனா். 

6 பேரும் சட்ட விரோதமாக இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி நீரியல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தலைமன்னாா் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.

இதையடுத்து ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற படகுடன் 6 மீனவர்களை சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா்கள் பாக் நீரிணை பகுதியில் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்தும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திங்கள்கிழமை ஒருநாள் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT