கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக் கல்வித் துறை குறைத்து நிர்ணயித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட குறைவான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது.
கட்டணத்தை உயர்த்தி வழங்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், கல்வி கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.
அதன்படி, எல்கேஜி, யுகேஜி, மற்றும் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ரூ.12,076 நிர்ணயம் செய்யப்படுள்ளது. இதேபோன்று , 6ஆம் வகுப்பிற்கு ரூ.15,711, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ரூ.15,711 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.