தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது 
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

DIN


சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.  இந்த அறிக்கை இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க வைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும், பரந்தூர் விமான நிலைய விவகாரம், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல், தமிழகத்தின் நலன் சார்ந்த பல முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமைச்சரவைக் கூட்டத்தில் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குதல், மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

பொலிவுறு நகரம் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT