கோவையில் பூத்தது நிஷா காந்தி மலர்கள்!  
தமிழ்நாடு

கோவையில் பூத்தது நிஷா காந்தி மலர்கள்! 

குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர்கள்  நம்ம கோவையில் பூத்துள்ளது.

DIN


குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர்கள்  நம்ம கோவையில் பூத்துள்ளது.

நிஷா காந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு நாள் மட்டும் பூக்கக்கூடியவை. தமிழக - கேரள எல்லைப் பகுதியான தேனி மற்றும் இடுக்கி மாவட்ட பகுதிகளில் நிஷாகந்தி மலர் செடிகள் அதிக அளவில் உள்ளன.

அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே பூக்கும் இந்த மலர் குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள இடங்களில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

இந்த நிலையில், கோவை பகுதியில் இந்த வியக்கத்தக்க மலர்கள் மலர்ந்துள்ளன. செல்வபுரம் நாடார் வீதியில் கவின் என்பவரது வீட்டில் இந்த  நிஷா காந்தி மலர்கள் 12 மலர்ந்துள்ளன. இந்த அதிசய மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு வியப்படைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT