மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக உயர்வு
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 1,30,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,30,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல: உயா்நீதிமன்றம்
நீர் மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,07,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆக உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு 15.40 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது.