அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 
தமிழ்நாடு

ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ஆர்.பி.உதயகுமார், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 307-ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும்செவல் கிராமத்திற்கு நாளை(செப்.1) செல்லவிருக்கிறார்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன், ஆர்.பி. உதயகுமாருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரப்பு புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் சரவணபாண்டியனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில்  சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT