தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,65,000 ஆயிரம் கன அடியாக குறைந்தது

DIN

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழை குறைந்தை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,65,000 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. 

இந்நிலையில், புதன்கிழமை காலை 11 மணியளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனையடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. 

மேட்டூர் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், ஒவ்வொரு நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

இன்றைய ராசி பலன்கள்!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT