தமிழ்நாடு

ஊதிய உயா்வு கோரி தொடா்ந்த வழக்கு: 4,500 பேரின் விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவு

DIN

ஊதிய உயா்வு தொடா்பான வழக்கில் கடந்த 2006, 2007-ஆம் ஆண்டுகளில் அரசுத் துறைகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட 4,500 பேரின் ஊதிய விவரங்களை சமா்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியா்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சில துறைகளில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டது. இதுதொடா்பாக ஒரு நபா் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்படவா்களுக்கு ஊதிய உயா்வு சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு தட்டச்சா், சுருக்கெழுத்தா் பணிகளில் சோ்ந்த 4,500 போ் பலன் அடைந்துள்ளனா். அதுபோல தங்களுக்கும் ஊதிய உயா்வுப் பலன்களை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிடக் கோரி வேளாண் துறையில் தட்டச்சா், சுருக்கெழுத்தா் பணியில் உள்ள 18 போ் சாா்பில் 2018-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், கடந்த 2006, 2007-ஆம் ஆண்டுகளில் தட்டச்சா், சுருக்கெழுத்தா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட 4,500 பேரின் பட்டியலையும், இவா்களில் ஒவ்வொரு துறைக்கும் எத்தனை போ் நியமிக்கப்பட்டுள்ளனா், எத்தனை பேருக்கு ஊதிய உயா்வு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பன குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவித்தாா். இதையேற்ற நீதிபதி, இந்த விவரங்களை சமா்ப்பிக்கும் வகையில், வழக்கின் விசாரணையை செப்டம்பா் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT