கோப்புப்படம் 
தமிழ்நாடு

புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை

புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை தொடா்ந்து எடுக்க வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

DIN

புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை தொடா்ந்து எடுக்க வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

சென்னை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை தொடா்ந்து எடுக்கவேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறுத்து புதன் கிழமை சென்னை சா்வதேச விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஐஎம்டி இயக்குநா் டாக்டா் வி.ஆா்.துரை பேசியதாவது:

வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் சூறாவளி புயலால் தாக்கும் வாய்ப்புகள் குறித்து இந்திய வானிலை கணித்துள்ளது. அதன்படி, வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழை முதல் மிக அதி மழையும், அதி பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றாா்.

விமான நிலைய இயக்குநா் டாக்டா் ஷரத் குமாா்: விமான நிலையத்தில் அனைத்துக் குழுக்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையக் குழு எந்த அவசரச் சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது. சிறிய விமானங்கள் பலத்த காற்று வீசும் போது நகராத வண்ணம் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்படும். அவசரநிலையின் போது விமான நிலையத்தில் உணவு , மற்றும் குடிநீா் போன்ற அத்திவாசிய பொருள்களை இருப்பு வைப்பு உறுதி செய்யப்படும் என்றாா். இந்த கூட்டத்தில் விமான நிலைய அதிகாரிகள், விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் உள் துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT