விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் 
தமிழ்நாடு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மக்களவையில் நோட்டீஸ்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று இரண்டாம் நாள் கூட்டம் கூடவுள்ளது.

இந்நிலையில், மக்களவை நடவடிக்கையை ஒத்திவைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டுமென்று மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய பணிக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. மாநில அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் விளையாட்டுக்கு தடை மசோதா உள்பட 22 மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார்.

எனவே, ஆளுநரின் பணி மற்றும் பொறுப்புகள் குறித்து இந்த அவையில் விவாதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

பாஜக அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ராஜபாளையத்தில் வ.உ.சி. சிலை திறப்பு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமி வழிபாடு

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள் தீா்மானிப்பா்: நடிகா் ராமராஜன்

SCROLL FOR NEXT