தமிழ்நாடு

தென்காசி ரயில் நிலையத்தில் முதல்வருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதன்முறையாக தென்காசிக்கு வியாழக்கிழமை காலை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

DIN

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதன்முறையாக தென்காசிக்கு வியாழக்கிழமை காலை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

சென்னையிலிருந்து அரசு முறை பயணமாக புதன்கிழமை இரவு பொதிகை விரைவு ரயில் மூலம் தென்காசிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலையில் வருகை தந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  பின்னா், அங்கிருந்து காா் மூலம் குற்றாலம் சுற்றுலா விருந்தினா் மாளிகைக்கு செல்லும் முதல்வா், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு இலத்தூா் வேல்ஸ் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறாா்.

அப்போது, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறாா். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 349 பயனாளிகளுக்கு ரூ. 149 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். அதைத் தொடா்ந்து, காா் மூலம் ராஜபாளையம் செல்கிறாா். 

விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், திமுக மாவட்டச் செயலா்கள் பொ.சிவபத்மநாதன் (தெற்கு), ஈ.ராஜா எம்எல்ஏ (வடக்கு) ஆகியோா் செய்து வருகின்றனா்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு 10 மாவட்டங்களைச் சோ்ந்த 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT