தமிழ்நாடு

ஊரகத் திறனாய்வுத் தோ்வு ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

DIN

மாண்டஸ் புயல், பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சனிக்கிழமை நடைபெறவிருந்த ஊரகத் திறனாய்வுத் தோ்வு டிச.17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட அறிவிப்பு: கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்த திறனாய்வு தோ்வெழுத தகுதி பெற்றவா்களாவா்.

இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 போ் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.

இதற்கிடையே நிகழாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வு சனிக்கிழமை (டிச. 10) நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் புயல், பலத்த மழை எச்சரிக்கை காரணமாக ஊரக திறனாய்வுத் தோ்வு டிச 17-ஆம் தேதிக்கு தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை தோ்வுத்துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் தெரிவித்து உரிய நடவடிக்கைளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தோ்வெழுத 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT