மதுரையில் அம்பேத்கர் சிலை: முதல்வர் திறந்துவைத்தார்! 
தமிழ்நாடு

மதுரையில் அம்பேத்கர் சிலை: முதல்வர் திறந்துவைத்தார்!

மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

DIN


மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் விழா மேடையில் இருந்தவாறு ரிமோட் மூலம் சிலையை திறந்து வைத்தனர். 

பின்னர் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அம்பேத்கர் முழு உருவச் சிலையையும் கல்வெட்டுகளை முதல்வருக்கு திருமாவளவன் காண்பித்தார். பின்னர் முதல்வர் விமானம் மூலம் சென்னை சென்றார். தொடர்ந்து திருமாவளவன் அம்பேத்கரை போற்றும் வீதமாக வீர வணக்கம் செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT