மாண்டஸ் புயல்: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு? 
தமிழ்நாடு

மாண்டஸ் புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை(டிச.10) விடுமுறை?

மாண்டஸ் புயல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. 

DIN

மாண்டஸ் புயல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல், வலுவிழந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய  மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

அதேசமயம் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கொலைக்கானல், சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT