தமிழ்நாடு

வலுவிழந்தது மாண்டஸ்: நாளை அதிகாலை கரையைக் கடக்கிறது!

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல், புயலாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல், புயலாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிமை ஆய்வுமைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்,  

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.

படிப்படியாக சென்னையை நெருங்கி வரும் மாண்டஸ் புயல் தீவிர புயலாக அல்லாமல் வலுவிழந்துள்ளது. 

இது மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை நெருங்கும்போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புயல் இன்று இரவு காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே மாமல்லபுரம் வழியாக கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT