கும்கி யானை உதவியுடன் இழுத்துவரப்படும் மக்னா யானை. 
தமிழ்நாடு

2 பெண்களைக் கொன்ற மக்னா யானை பாதுகாப்பாக வனத்தில் விடுவிக்கப்பட்டது!

2 பெண்களைக் கொன்ற மக்னா யானை, 18 நாள்கள் தீவிர முயற்சிக்கு பின்னர் சீகூர் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. 

DIN


நீலகிரி: 2 பெண்களைக் கொன்ற மக்னா யானை, 18 நாள்கள் தீவிர முயற்சிக்கு பின்னர் சீகூர் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவாலா வாழவயல் பகுதியில் பாப்பாத்தி என்பவரை கடந்த நவம்பா் 20 ஆம் தேதி மக்னா யானை தாக்கிக் கொன்றது.

இதேபோல, புளியம்பாறை கிராமத்தில் கல்யாணியம்மா என்ற மூதாட்டியை கடந்த 3 ஆம் தேதி மக்னா யானை தாக்கிக் கொன்றது. மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் சேதப்படுத்தியது.

இதையடுத்து, மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். பல்வேறு கட்சியினரும் மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தினா். வனத் துறையினரும் யானையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், தேவாலா தேயிலைத் தோட்டம் மூன்றாவது சரகப் பகுதியில் உள்ள காளிமுத்து என்பவரின் வீட்டை புதன்கிழமை நள்ளிரவு மக்னா யானை இடித்து சேதப்படுத்தியது.

இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை வனப் பகுதியில் விரட்டி, தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

நீடில்ராக் வனப் பகுதியில் முகாமிட்டிருந்த மக்னா யானைக்கு வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தினா். மயக்க ஊசி செலுத்தியவுடன் அடா்ந்த வனப் பகுதிக்குள் ஓடிய மக்னா யானையை விஜய், சுஜய், வசிம், கிருஷ்ணா ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் வனத் துறையினா் வெளியே இழுத்து வந்தனா்.

லாரி மூலம் முதுமலைக்கு மக்னா யானை அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவப் பரிசோதனை செய்தபின் அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி, 2 பெண்களைக் கொன்ற மக்னா யானை 18 நாள்கள் தீவிர முயற்சிக்கு பின்னர் கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி வியாழக்கிழமை பிடிக்கப்பட்ட பிஎம்2 மக்னா யானை, ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, சீகூர் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாதுகாப்பாக விடுவித்தனர் வனத் துறையினா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

நவராத்திரி - தீபாவளி வரை சுதேசி மேளா நடத்த அறிவுரை!

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT