தமிழ்நாடு

கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ் புயல்!

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

DIN

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, தற்போது வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், மாமல்லபுரம் அருகே புயலின் வெளிவட்டப் பகுதி கரையை கடந்து வருகிறது.

இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 70 கி.மீ. வரை காற்று வீசுகிறது. தொடர்ந்து மாண்டஸ் புயல் 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மாண்டஸ் புயலின் மையப்பகுதி நள்ளிரவு 2 மணிக்குள் கரையை முழுவதுமாக கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், அப்பகுதிகளில் உள்ள உணவகங்களை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புயல் கரையை கடக்கும் மாமல்லபுரம் சுற்றுப்பகுதி மக்களை நிவாரண முகாம்களில் மாவட்ட நிர்வாகம் தங்கவைத்துள்ளது.

புயல் கரையை கடந்த பிறகு சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

சின்ன வடுகப்பட்டியில் வீடுகளுக்கு சீல்: அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து அரசியல் கட்சியினர், குடியிருப்புவாசிகள் போராட்டம்

26,100 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

காலேஜ் கட் அடித்துவிட்டு படம் பார்க்க வேண்டாம்: கவின்

SCROLL FOR NEXT