தமிழ்நாடு

சிறுசேரி - கேளம்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் மாண்டஸ் புயல்!

DIN

மாண்டஸ் புயல் சிறுசேரி - கேளம்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாண்டஸ் புயலின் மையப்பகுதி நள்ளிரவு 1 மணி அளவில் கேளம்பாக்கத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் சென்னைக்கு மிக அருகே இருப்பதால் சென்னைக்கு தாக்கம் அதிகம் இருக்கும்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, தற்போது வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், மாமல்லபுரம் அருகே புயலின் வெளிவட்டப் பகுதி கரையை கடந்து வருகிறது.

இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 70 கி.மீ. வரை காற்று வீசுகிறது. தொடர்ந்து மாண்டஸ் புயல் 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய மோகினி! நபா நடேஷ்..

5 கட்டத் தேர்தல்களில் 310 இடங்களில் வெற்றி உறுதி - அமித் ஷா

அன்பியே.. நமீதா கிருஷ்ணமூர்த்தி!

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT