திருச்சி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்!
பாபா திரைப்படம் மீண்டும் வெளியானதைத் தொடர்ந்து திருச்சி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திருச்சி: பாபா திரைப்படம் மீண்டும் வெளியானதைத் தொடர்ந்து திருச்சி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 2 திரையரங்குகளில் சனிக்கிழமை இத்திரைப்படம் வெளியானது.
திருச்சி மெயின்கார்டு கேட் செல்லும் வழியில் உள்ள திரையரங்கில் பாபா திரைப்படச்சுருள்கள் அடங்கிய பெட்டியைப் போன்று மாதிரிப்பெட்டியை வடிவமைத்து அதனை ரசிகர்கள் சுமந்தபடி வந்தனர்.
மேள, தாளங்கள் முழங்க திரைப்பட பெட்டியை கொண்டு வந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திருச்சி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்கள் மன்றச் செயலர் எம். கலீல் தலைமையில் ரஜினி ரசிகர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.