கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றோர் 
தமிழ்நாடு

கடையத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா!

கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் பாரதியார் 141ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் பாரதியார் 141ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் சேதாராமலிங்கம் தலைமை வகித்து பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார். செயலர் கல்யாணி சிவகாமிநாதன், ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகச் செயலர் மாடசாமி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளிச் செயலர் சுந்தரம், கடையம் பாரதி அரிமா சங்க நிர்வாகிகள் முருகன், குமரேசன், இந்திரஜித், கோபால், கடையம் முத்தமிழ் கலா மன்றம் அமைப்பாளர் கலையரசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் மன்னன், பேராசிரியர் கல்யாணராமன், கல்யாண சுந்தரம், ராமானுஜம், பணி நிறைவு வட்டாட்சியர் சின்னச்சாமி, சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT