கனமழை காரணமாக மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், மாமல்லபுரத்திற்கு அருகே கடந்த சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால், இந்த 3 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் இன்று பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.