கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளம்: 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக  30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக  30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1742 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

இரு கரையோரங்களிலும் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, ஆளந்தார்மேடு, விப்பேடு, வெங்கடாபுரம், செவிலிபேடு, கோழிவாக்கம், வளத்தோட்டம், குருவிமலை, வாலாஜாபாத் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ கூடாது என்று மாவட்டம் நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது. மேலும், கால்நடைகளை பாலாற்றில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ள அபாய எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவ மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் வெள்ள நிர் வந்து கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து பாலாற்றில் அமைந்துள்ள புல்லூர் தடுப்பணை தாண்டி வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. அதேபோல வேலூர் மாவட்டம் மோர்தான அணை  மற்றும் கிளை ஆறுகளில் இருந்து மழை வெள்ளநீர் பாலாற்றில் கலந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அணைக்கட்டு தடுப்பணையை  நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்த வெள்ள நீர் திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி சுமார் 1,500 கன அடியாக இருக்கிறது. இந்த வெள்ள நீர் முழுவதும் பாலாற்றிலேயே காஞ்சிபுரம் நோக்கி அப்படியே அனுப்பப்படுகிறது.

மேலும் தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்க்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆகவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பாலாற்றில் இறங்க வேண்டாம் என்றும், பாலாற்றங்கரையோரம் மக்கள், குழந்தைகள், இளைஞர்கள் வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மாவட்ட  மக்களுக்கு  வெள்ள  அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT