தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதலே பல்வேறு பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- திருவள்ளூரில் இன்று மதியம், நாளை(டிச.13) பள்ளிகளுக்கு விடுமுறை
மேலும் இந்த தொடர் மழை காரணமாக சாலையோர வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை தஞ்சாவூர், திருவையாறு, திருமலை சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.