கோப்புப் படம் 
தமிழ்நாடு

மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு

'மாண்டஸ்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

DIN

'மாண்டஸ்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ஆம் தேதி தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 10ஆம் தேதி புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடந்தது. புயல் காரணமாக தொடர் மழை பெய்ததால், டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. 

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. தற்போது அண்ணா பல்கலைக் கழகம் புயலா, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது. 

அந்தவகையில், டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ஆம் தேதி தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT