லட்சுமி யானையின் கற்சிலையை கட்டியணைத்து எடுக்கவிடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள். 
தமிழ்நாடு

லட்சுமி யானையின் கற்சிலை அதிரடியாக அகற்றம்: மக்கள் மீது போலீசார் தடியடி!

புதுச்சேரி மிஷன் வீதியில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை போலீசார் அதிரடியாக அகற்றியபோது,  சிலையை கட்டியணைத்து எடுக்கவிடமாட்டோம் என பொதுமக்கள் அழுதனர்.

DIN



புதுச்சேரி மிஷன் வீதியில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை போலீசார் அதிரடியாக அகற்றியபோது,  சிலையை கட்டியணைத்து எடுக்கவிடமாட்டோம் என பொதுமக்கள் அழுதனர். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29 ஆம் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி அருகே நடைப்பயற்சி சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறந்த இடத்தில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தனர். 

லட்சுமி யானையின் கற்சிலையை கற்றக்கூடாது என போலீசாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள். 

இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அங்கு திடீரென 2 அடி உயரத்தில் யானையின் கற்சிலை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தி வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அனுமதியின்றி இங்கு சிலை வைக்கக்கூடாது என்றும் அதனை அகற்றுமாறும் உத்தரவிட்டனர். ஆனால், சிலையை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் சிலையை அகற்ற காலக்கெடு கொடுத்து விட்டு சென்றனர். போலீசார் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீத ரெட்டி தலைமையில் போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு லட்சுமி யானையின் சிலையை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை அகற்ற முயன்றனர். 

அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், ஏற்கனவே கூறியபடியே சிலை அகற்றப்படுகிறது என்று போலீசார் கூறினர். இதை பொதுமக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். 

லட்சுமி சிலையை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை அப்புறப்படுத்தும் போலீசார்.  

மேலும், சிலையை அகற்ற விடமாட்டோம் என கோரி லட்சுமி சிலையை கட்டி அணைத்து அழுதனர். தொடர்ந்து போலீசார் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சிலையை அப்புறப்படுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்புப் பணியிடல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT